Editorial / 2017 ஜூலை 21 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
படம்பிடிப்பதற்காக, வானில் நிறுத்தப்படும் ஒவ்வொரு ட்ரோன் கமெராக்களும், அதனை இயக்குபவரும், சிவில் விமான சேவை அதிகாரசபையில் பதிவுசெய்வதைக் கட்டாயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துவருகிறது.
அதற்கான சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளை, சட்டமூலத்தின் ஊடாக நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ட்ரோன் கமெராக்களை ஒழுங்கற்றமுறையில் சிலர் செயற்படுத்துவதாகவும், ஆகையால், விமான சேவைகள் அதிகாரசபையில் பதிவுசெய்யப்படவேண்டும் மற்றும் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதும் இதனூடாகக் கட்டாயப்படுத்தப்படவுள்ளது.
அதற்கு மேலதிகமாக, பாதுகாப்பு அமைச்சு, அந்தப் பிரதேசத்தின் கலாசார,
தொல்பொருளியல், நீர்ப்பாசனம், மின்சக்தி அதிகாரசபை மற்றும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அதனடிப்படையிலேயே சட்டத்தைத் தயாரிக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ட்ரோன் கமெராக்களைச் செயற்படுத்தல் தொடர்பான சட்டத்தொகுதியைத் தயாரிப்பதற்காக, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையால் மேற்கொள்ளப்பட்ட பயிலரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைகையில்,
ட்ரோன் கமெராக்கள் மூலமாக, விமானங்களும் விபத்துக்கு உள்ளாக வேண்டிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, ட்ரோன் கமெராக்களை அனுமதியின்றி, வானுக்கு அனுப்புதல், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
எவ்வாறெனினும், பொழுதுபோக்கு மற்றும் கற்றல் செயற்பாடுகளைக் கவனத்தில் கொண்டு, 200 கிராமுக்கு குறைவான ட்ரோன் கமெராக்கள் அல்லது பறப்பதற்கான உபகரணங்கள் பொருத்தப்படாத ட்ரோன் கமெராக்கள், வீட்டுத்தோட்டத்திலிருந்து 150அடி உயரத்துக்கு குறைவான வான்பரப்பில், பறக்கவிடுவதற்காக, மேற்குறிப்பிட்ட அனுமதியை பெற்றுக்கொள்ளவோ அல்லது பதிவுசெய்யவோ தேவையில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ட்ரோன் கமெராக்களைப் பயன்படுத்துவோரில் சிலர், அந்தக் கமெராக்களை முறைகேடாகப் பயன்படுத்தி, தேவையில்லாத புகைப்படங்களை எடுப்பதாகவும், தனிப்பட்ட சொத்துகள், வீடு உள்ளிட்டவற்றுக்கு அண்மையிலான காட்சிகளைப் பதிவுசெய்துகொண்டுள்ளனர் என, முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
9 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago