2021 ஜனவரி 27, புதன்கிழமை

தங்க பாதணிகள் சிக்கின

Kanagaraj   / 2016 ஜூலை 14 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க துண்டுகளை, ஆறு பாதணிகளுக்குள் மறைத்துவைத்து நாட்டுக்குள் கடத்த முயன்றவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இந்தியா, மும்பையிலிருந்தே அவர், தங்கத்தை கடத்தியுள்ளார் என்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்தவர் என்று தெரிவித்த சுங்கப்பிரிவினர், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .