Princiya Dixci / 2016 ஜூலை 27 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி. நிரோஷினி
ஒன்றிணைந்த எதிரணியினர் தனிக்கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அனுமதியளிக்காது என திறன்விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
'நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை செய்யவுள்ளதாகத் தெரிவித்து ஒன்றிணைந்த எதிரணியினர் பாதயாத்திரை உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். நல்லெண்ணத்துடனேயே அரசாங்கமும் செயற்படுகிறது. ஒன்றிணைந்த எதிரணியினர் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமாக இருந்தால், அரசாங்கத்துடனேயே இணைந்து செயற்பட வேண்டும். அதை விடுத்து தனியாகப் பிரிந்து சென்று ஆர்ப்பாட்டம், பாதயாத்திரை நடத்துவது நல்ல நோக்கத்துக்காக அல்ல' என்றார்.
'மேலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்களாக இருந்துகொண்டு பிறிதொரு கட்சியை ஆரம்பிக்கும் செயற்பாட்டுக்கு கட்சி துணைபோகாது என்பதுடன், அதற்கு இடமளிக்கப்போவதுமில்லை' எனத் தெரிவித்தார்.
25 Nov 2025
25 Nov 2025
25 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Nov 2025
25 Nov 2025
25 Nov 2025