2021 மே 06, வியாழக்கிழமை

தனியாரிடம் இரத்தப் பரிசோதனை செய்ய தடை

George   / 2016 ஜூலை 31 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுப்புவது முழுமையாக தடைசெய்யப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து இந்தத் தடை அமுல்படுத்தப்படும்.

குறித்த தினத்திலிருந்து சகல அரச வைத்தியசாலைகளிலும் இரத்தப் பரிசோதனை செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய சகல அரச வைத்தியசாலைகளுக்கும் இரத்தம் பரிசோதனை செய்யும் இயந்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .