Editorial / 2017 ஜூன் 04 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கண்டி - அநுரகம பிரதேசத்திலுள்ள சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற 16 வயதான சிறுமிகள் இருவரையும், பூஜாபிட்டிய பொலிஸார் நேற்று (03) கைதுசெய்துள்ளனர்.
கண்டி மற்றும் அம்பாறை ஆகிய நீதிமன்றங்களின் உத்தரவுக்கமைய, குறித்த சிறுமிகள் இருவரும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அங்கிருந்து அண்மையில் தப்பியோடிவிட்டனர்.
இந்நிலையில், அந்த சிறுமிகள் இருவரும், கண்டி - பூஜாபிட்டிய பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட சிறுமிகளை, கலகெதர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
9 minute ago
13 minute ago
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
24 minute ago
2 hours ago