2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைமை பொறுப்பு உருத்ரகுமாரனுக்கு?

Super User   / 2010 மே 30 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைமைப் பொறுப்பிற்கு நாடு கடந்த தமிழீழ அரசின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றி வரும் உருத்ரகுமாரனை நியமிக்கத் திட்டமிடப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

புலம்பெயர் தமிழர்களினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பானது தற்போது சிரேஸ்ட அரசியல்வாதியான இரா.சம்பந்தனால் வகிக்கப்பட்டு வருகின்றது.

இரா.சம்பந்தன் கடந்த நாற்பது வருடங்களாக ஜனநாயக அரசியலில் ஈடுபட்டு வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
 
 


  Comments - 0

  • xlntgson Monday, 31 May 2010 10:03 PM

    இராஜவரோதன் சம்பந்தனாருக்கு என்ன ஆயிற்று, ஏன், அவர் அரசியலில் வெறுப்படைந்து விட்டாரா? உருத்திரகுமாரன் போன்றோர் இலங்கையில் அரசியல் புரிவார்களா, அமெரிக்காவிலும் கனடாவிலும் இங்கிலாந்திலும் இருந்து அறிக்கைகள் விடுவார்களா? அவருக்கும் நெடியவனுக்கும் பிரச்சினை என்று பத்திரிகைகளில் பார்த்தேன். தலைமைத்துவத்துக்கு, நெடியவன் நோர்வேயில் இருந்து செயல்படுவாராம், இந்தியாவில் இருப்பதைப்போன்ற மாகாண சபைகூட தர இயலாது என்று ஜனாதிபதி ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார், பொலீஸ், காணி அதிகாரம் இல்லாத மாகாணசபை வெள்ளையானை!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .