Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 மே 30 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியினால் அண்மையில் தமிழ் வாக்காளர் பதிவு தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கம்பஹா, களுத்துறை, கண்டி, நுவரெலியா, புத்தளம், மாத்தளை, இரத்தனபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறு அதிகளவான தமிழ் வாக்காளர்களின் பெயர்கள் தேர்தல் இடாப்பில் பதியப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாக்களிக்கத் தகுதியான மொத்த தமிழ் சனத் தொகையில் 68 வீதமானவர்களே பதிவு செய்யப்பட்டுள்ளனர் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். 300,000 தகுதியான தமிழ் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பில் பதியப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதியானதும், சுதந்திரமானதுமான முறையில் வாக்காளர் பதிவு நடைபெறும் வரையில் தேர்தல் முறைமையில் வேரேதும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படக் கூடாது என மனோ கணேசனால் தேர்தல் ஆணையாளரிடம் கோரப்பட்டுள்ளது.
தேர்தல் முறையில் திருத்தங்கள் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர் பதியப்படாத வாக்காளர்கள் பதியப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடையும் வரையில் காத்திருந்ததாகவும், எதிர்காலத்தில் நியாயமான தமிழ் பிரதிநிதித்துவம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் வாக்காளர் பதிவுகளை மேற்கொள்ள தேர்தல் திணைக்களம் முனைப்பு காட்டி வருவதாகவும், அதே முனைப்பு தெற்கு தமிழ் வாக்காளர்கள் தொடர்பிலும் காட்டப்பட வேண்டும் எனவும் மனோ கணேசன், தேர்தல் ஆணையாளரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.
தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முன்னர் வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்படல் வேண்டுமென அவர் மேலும் அந்த கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago