2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

தெரிவுக்குழு பெயர்ப் பட்டியல் இன்று சமர்ப்பிப்பு

Editorial   / 2020 ஜனவரி 21 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்காக அரசியல் கட்சிகளினால் பிரேரிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான அனுமதி இன்று (21) பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

இன்று (21) மதியம் ஒரு மணிக்கு நாடாளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதுடன், இன்றைய ஒழுங்குபத்திரத்தில் தெரிவுக்குழுக்கள் தொடர்பான பெயர்ப்பட்டியல் உள்வாங்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் 9 உறுப்பினர்களினதும் எதிர்க்கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களினதும் பெயர்ப்பட்டியல், நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சபாநாயகர் தலைமையிலான 17 பேரடங்கிய தெரிவுக் குழுக்களுக்கான பெயர்ப் பட்டியலுக்கான அனுமதி இன்று பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--