2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

திருட்டு சம்பங்களுடன் தொடர்புடைய கடற்படை வீரர் எண்மர் கைது

Niroshini   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலை, பெலியத்த  பிரதேசத்தில் இடம்பெற்ற பல கொள்ளை சம்வங்களுடன் தொடர்புடைய  கடற்படை வீரர் எண்மரை  தங்காலை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து, ரீ-56 ரக துப்பாக்கி கைப்பற்றியுள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மரிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுபவர்கள் என விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேக நபர்களில் எண்மரில், இருவர் கடற்படையில் இருந்து நீக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணையை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .