2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

நாட்டின் பல பாகங்களிலும் காற்றுடன் கூடிய மழை-பிரியந்த கொடிப்பிலி

Super User   / 2010 ஜூன் 25 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்  பேச்சாளர் பிரியந்த கொடிப்பிலி தெரிவித்தார்.

இந்த வாரத்தில் வீசிய கடும் காற்றுக் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சிறியளவில் சேதத்திற்குள்ளாகியதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், மழை காரணமாக ஏற்படும் வெள்ளநீரால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்வடைவது தொடர்பில் அவதானிக்கப்பட்டு வருவதுடன், தேவையேற்படின் இது தொடர்பில் பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் எனவும் பிரியந்த கொடிப்பிலி குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .