2021 ஜனவரி 16, சனிக்கிழமை

நாடாளுமன்றில் பெரும்பான்மை பெற்ற நபரே பிரதமர்: சஜித்

Editorial   / 2019 நவம்பர் 07 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களின் ஒருமித்த கருத்து இல்லாமல் புதிய அரசியலமைப்பு செயல்படுத்தப்படமாட்டாது என, புதிய ஜனநாயக முன்னியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.

அத்துடன், தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர், நாடாளுமன்றில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடிந்த ஒருவரே பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.

புதிய அமைச்சரவைக்கு மோசடியில் ஈடுபடாத நபர்கள் தெரிவுசெய்யப்பட்டு கூடிய விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட உரையொன்றை இன்று (07) ஆற்றிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் வாகன அனுமதிப்பத்திரத் இரத்துச்செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .