2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு எதிராக இரண்டாம் கட்ட நடவடிக்கை

Super User   / 2010 மே 12 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்காக விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எடுக்கும் முயற்சிக்கு எதிராக நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு கொண்டு வந்துள்ள போதிலும் சர்வதேச ரீதியில் அவ்வமைப்பின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று இராணுவ பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

அதற்கு எதிராக அரசாங்கத்தினால் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பு, தற்போது சர்வதேச ரீதியில் வியாபித்துவரும் புலிகளின் இரண்டாம் கட்ட பயங்கரவாத நடவடிக்கையினைத் தடுக்கவும் அனைத்து தரப்பினராலும் வழங்கப்பட வேண்டும் என்றும் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

  Comments - 0

 • KONESWARANSARO Thursday, 13 May 2010 03:15 AM

  நாடு கடந்த அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைக் காட்டிலும் இலங்கைக்குள்ளேயே தமிழர்களின் தாயகத் தன்னாட்சி அதிகாரத்தை வழங்க முனைவது அரசுக்கு நல்ல பலனைத் தரும்.

  Reply : 0       0

  kaliraj Friday, 14 May 2010 08:17 PM

  இலங்கை முதலில் தன் நாட்டில் நடைபெறும் உள்நாட்டு கலவரத்தை கட்டுபடுதட்டும். பின்பு வெளி உலகத்தை கட்டுபடுதட்டும்.

  Reply : 0       0

  ravi Saturday, 15 May 2010 03:43 AM

  நாடு கடந்த அரசு ஒரு ஜோக் எண்டாங்கள். பிறகேன் கவலைப்படுறாங்கள்.

  Reply : 0       0

  senthi Sunday, 16 May 2010 07:32 AM

  why srilanka is worried about Transnational Government of Tamil Eelam is being formed worldwide?
  once they told that tis is a joke.
  new they feel this will have a major effect on srilankan politics and tamils will be supported by foreign politicians.
  Time for Tamils to fight for their rights have come. so dont worry and continue with the Transnational Government of Tamil Eelam.
  my best wishes
  Senthi

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--