2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

“நல்லாட்சி அரசாங்கம் நாய்களை கொல்வதில்லை”

Kogilavani   / 2017 ஜூலை 21 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நல்லாட்சி அரசாங்கத்தில்,  நாய்கள் மற்றும் கால்நடைகள் கொல்லப்படுவதாக, சமூக ஊடகங்கள், ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை” என்று,  மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஐஐஎப்ஏ விருது விழா வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற காலத்தில், தெருவில் சென்ற நாய்கள் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த அமைச்சர்கள், தாம் அமைச்சர்களாக இருந்த காலத்தில் அதற்கெதிராக எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பதுளையில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு, நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

தெருவில் வீசி எறியப்படும் பொலித்தீன்களை உணவாக உட்கொண்டு உயிர்விடும் அப்பாவி விலங்குகளின் உயிர்களை காப்பற்றுவதற்கு முன்வருமாறு, நாய்கள்,  கால்நடைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டுவரும் சமூக ஆவர்வலர்களிடம் தாம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .