2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

பூசகரால் சிறுவன் துஷ்பிரயோகம்

Editorial   / 2018 செப்டெம்பர் 15 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில், நேற்று (14) ஆலய பூசகர் ஒருவர் சிறுவனொருவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கிளிநொச்சி - கண்டாவளை -கோரக்கன்கட்டுப்பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு, பூசைக்காக வந்த பூசகர் ஒருவர், அப்பகுதியில் உள்ள சிறுவன் ஒருவனை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்று கிளிநொச்சியில் உள்ள வீடொன்றின் அறையினுள் நாள் முழுதும் பூட்டிவைத்து பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த சிறுவனை வேறொருவருடன் அவரது சொந்த இடத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த சிறுவன் நடந்த சம்பவத்தை அயலவர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் கண்டாவளைப்பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணைகளை மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--