Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Kanagaraj / 2015 நவம்பர் 24 , பி.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் கம்பஹா ஒருதொட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தை விற்பனை செய்வதற்கோ, யாரிடமாவது ஒப்படைப்பதற்கோ அல்லது கைமாற்றுவதற்கோ கம்பஹா மாவட்ட நீதிமன்ற நீதவான் தடைவிதித்துள்ளார்.
அமைச்சின் காரியாலயமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்துக்கே மேற்கண்டவாறு நேற்று செவ்வாய்க்கிழமை கம்பஹா மாவட்ட நீதிமன்ற நீதவான் டிக்கிரி கே. ஜயதிலக்கவினால் முத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை தொடர்பில், கம்பஹா மாவட்ட காணி ஆணையாளருக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள நிதி மோசடி பிரிவு விசாரணைப் பிரிவினால் (எப்சீஐடி), நகர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
டி.ஏ. ராஜபக்ஷ மன்றத்தின் ஊடாக இந்த காணி கொள்ளவனவு செய்யப்பட்டுள்ளதாக எப்.சீ.ஐ.டி அதிகாரிகள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததுடன் அந்தக் கட்டடத்தை விற்பனை செய்வதற்கோ, யாரிடமாவது ஒப்படைப்பதற்கோ அல்லது கைமாற்றுவதற்கோ தடைவிதிக்குமாறு கோரிநின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
58 minute ago
3 hours ago
4 hours ago