2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

படுகொலை செய்யப்பட்ட பொலிஸாரை நினைவுகூறும் இளைஞர்கள்

Editorial   / 2019 நவம்பர் 30 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுணதீவில் பயங்கரவாதிகளால் கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்ட இரு பொலிஸாரின் நினைவுத் தினத்தை முன்னிட்டு, இன்று(30) இரத்ததான நிகழ்வு நடைபெற்றுவருகிறது.

காலை 8 மணி முதல் காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை இளைஞர்களால் இந்த இரத்ததான நிகழ்வு  பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்று வருகிறது.

கடந்த வருடம் இதே தினத்தில் வவுணதீவு சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த இரு பொலிஸார் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் தலைமையிலானக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X