Yuganthini / 2017 ஜூன் 08 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
அபிவிருத்தி மதிப்பீடுகள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக, அரச பொதுமுயற்சிகள் அமைச்சர் கபீர் ஹாஸிம், நுவரரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோர் பூட்டானுக்கு பயணமாகியுள்ளனர்.
2030ஆம் ஆண்டு அடைய வேண்டிய இலக்குகளாக, ஐக்கிய நாடுகள் சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 'நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை' அடையும் வகையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை, மதிப்பீடு செய்யும் பொறிமுறைகள் தொடர்பாக பல்வேறு செயலமர்வுகள், மாநாடுகள் நடைபெறுகின்றன.
அபிவிருத்தி மதிப்பீட்டுப் பணிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளும் எண்ணக்கருவை முன்வைத்தார் என்ற வகையில், அமைச்சர் கபீர் ஹாசிம், கடந்த மாதம் கிரிகிஸ்தான் நாட்டில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தென்னாசிய பிராந்தியத்தில் அபிவிருத்தி முன்னெடுப்புகளிலும் மதிப்பீடுகளிலும் முன்னணியில் திகழும் பூட்டான், தென்னாசிய மதிப்பீட்டு சமூகத்துடன் (CoE) இணைந்து, நான்கு நாட்களுக்கான (6-9 June) மாநாடு ஒன்றை தலைநகரமான திம்புவில் எற்பாடு செய்துள்ளது.
குறிப்பிட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அமைச்சர் கபீர் ஹாஸிம், நுவரரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோர் பூட்டானுக்கு பயணமாகியுள்ளனர்.
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025