2021 ஜனவரி 20, புதன்கிழமை

பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2019 நவம்பர் 20 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பாதுகாப்புக்காக பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை நான்காக மட்டுப்படுத்த, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக அம்பியுலன்ஸ் வண்டி உள்ளடங்களாக 15 தொடக்கம் 20 வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட வந்த நிலையிலேயே, பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை மட்டுபடுத்த ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளாரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அவர் பயணிக்கும் போது, வீதிகளை மூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .