2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

புத்தல பகுதியில் கடத்தப்பட்ட சிறுவன் அம்பாறையில் கண்டுபிடிப்பு

Super User   / 2010 ஜூன் 20 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை, புத்தல பகுதியில்  கடத்தப்பட்ட 3 வயதுச் சிறுவன் அம்பாறையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

குறித்த சிறுவன் காணாமல்ப் போயிருந்த நிலையில், சிறுவனது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து, விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸார், அம்பாறையில் நேற்று மாலை  சிறுவனை கண்டுபிடித்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இனிப்புப் பண்டம் தருவதாகக் கூறி ஆண்கள் இருவர் குறித்த சிறுவனை அழைத்துச் சென்றிருந்தனர். சிறுவனின் பெற்றோரிடமிருந்து கப்பம் கோரும் நிலையிலேயே, குறித்த சிறுவன் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--