2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் கம்பளிப்பூச்சிகள் அட்டகாசம்

Super User   / 2010 ஜூன் 08 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளத்தின் சேனகுடியிருப்பு எனும் பகுதியில்   கம்பளிப் பூச்சிகள் அதிகளவில் பரவியிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு நேற்றுக் காலையில் பரவிய கம்பளிப் பூச்சிகள் வீடுகளுக்குள் நுழைந்திருந்த அதேவேளை, அங்குள்ள மரங்களையும் அரித்து சேதப்படுத்தியதாகவும்   பிரதேசவாசிகள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டததன் பின்னர், மேற்படி கம்பளிப் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான இராசாயன மருந்து தெளிக்கப்பட்டதாகவும்,  இவ்வாறு மருந்து தெளிக்கப்பட்டதன் பின்னர்  கம்பளிப்பூச்சிகளின் எண்ணிக்கை  சிறிதளவில் குறைவடைந்திருந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, மொரட்டுவ பிரதேசத்தில் கடந்த மாதம்  தவளைக் கூட்டங்கள்  வீடுகளுக்குள் புகுந்திருந்ததுடன், வீதிகளிலும் அலைந்து திரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .