2021 ஜனவரி 16, சனிக்கிழமை

புதிய ஜனாதிபதிக்கும் ஐ.தே.மு தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு நாளை?

Editorial   / 2019 நவம்பர் 19 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கிடையில்,  நாளை (20) கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதா அல்லது நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்வதா என்பது தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்காகவே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்று (18) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களுக்குமிடையில் நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் நடைபெற்ற நீண்ட கலந்துரையாடல் எவ்வித தீர்மானங்களும் இன்றி நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .