2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

பொது இடங்களில் முத்தமிட்டதாக 200 இளம் ஜோடிகளுக்கு எதிராக வழக்கு

Super User   / 2010 ஜூன் 10 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது இடங்களில் தகாத முறையில் நடந்துகொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 200 இளம் ஜோடிகள் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நாட்டின் இரு பிரதான நகரங்களான குருநாகல் மற்றும் மாத்தறை போன்ற பிரதேசங்களிலிருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பீ.பீ.சி. செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

குறுத்த பிரதேசங்களிலுள்ள பொது மைதானங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் முத்தமிடுதல் உள்ளிட்ட தகாத நடவடிக்கைகைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே மேற்படி ஜோடிகள் கைதாகியுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்களில் பெரும்பாலானோர் 15 வயதான பாடசாலைச் செல்லும் சிறுமிகள் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னரும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சுமார் 350 ஜோடிகள் உரிய எச்சரிக்கைகளின் பின்னர் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மேற்படிச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

  Comments - 0

  • xlntgson Thursday, 10 June 2010 09:59 PM

    காதலிக்கிறவர்களை பெற்றோருக்கு காட்டிக்கொடுக்க பொலீஸ் செய்யும் ஒரு யுக்தி இது என்று தெரிகிறது, இதில் பெரும் தவறு ஒன்றும் ஏற்பட்டு விடாது, ஜலதோஷம் போன்ற வைரஸ் நோய் தொற்றிக்கொள்வதைத் தவிர! அது சரிதான், படிக்கிறவயதில் எதற்கு காதலும் கத்திரிக்காயும்! ஒரு நல்லதொழிலை தேடிக்கொள்ளாமல் காதலில் விழுவது பைத்தியக்காரத்தனம் மட்டுமல்ல குடும்பத்துக்குள்ளே பிரச்சினைகளை வளர்ப்பதும் ஆகும். இளம்வயதிலே காதலிப்பது பைத்தியம் போல் இருக்குமுனு தெரியாதோ நோக்கு என்று இருந்துவிட முடியாது. இந்த காலத்தில் படிப்புச் செலவதிகம்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--