Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 10 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், வௌிநாட்டு விஜயங்களுக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று (10) பயணமாகவுள்ளனர்.
வியட்னாம் ஹேனொய் நகரில் இடம்பெறவிருக்கும் ஆசியா நாடுகளின் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பயணமாகவுள்ளார்.
வலய எதிர்கால பொருளாதார முன்மாதிரி மேம்பாடு மற்றும் சவால்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் கவனஞ்செலுத்தப்படும்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இரண்டு நாள்கள் விஜயத்தை மேற்கொண்டு, இந்தியாவுக்கு இன்று (10) பிற்பகல் பயணிக்கவுள்ளார்.
மஹிந்தவுடன், அவருடைய புதல்வர்களில் ஒருவரான நாமல் ராஜபக்ஷ எம்.பி தலைமையிலான குழுவினர் பயணிக்கவுள்ளனரென தகவல் வெளியாகியுள்ளது.
பாதீய ஜனத்தா கட்சியின் சிரேஷ்ட தலைவர் கலாநிதி சுப்ரமணியம் சுவாமியின் விசேட அழைப்பையேற்றே, மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
தான் தங்கியிருக்கும் இரண்டு நாட்களில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் பிரபலமான அரசியல்வாதிகள் சிலரை, மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடவுள்ளாரென, அவருடைய அந்தரங்கச் செயலாளர் உதித லொக்குபண்டார தெரிவித்தார்.
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago