2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பாலித்த ரங்கே பண்டார ஐ.தே.க செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவுக்கு பதிலடி

Super User   / 2010 மே 31 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவின் மனநிலை சம்பந்தமாக அக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்த கருத்துத் தொடர்பில்நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயகவுக்கு பாலித்த ரங்கே பண்டார கடிதம் எழுதியுள்ளார். 

தன்னுடை மனநிலை சம்பந்தமாக கருத்துத் தெரிவிக்க எந்தவிதமான உரிமையும் இல்லை.  இது சம்பந்தமாக வைத்தியரால் மாத்திரம்  தான் சான்றிதழ் வழங்க முடியும் என்றும் சிலர் வைத்தியராக மாற முற்படுவதாகவும் அக்கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இக்கடிதத்தின் பிரதிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் காமினி ஜெயவிகரம பெரோரா மற்றும் பிரதித் தலைவர் கரு ஜெயசுரிய ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--