2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

மாயமாகும் முச்சக்கர வண்டிகள் - வெளியான அதிர்ச்சி தகவல்

Lenin Raj   / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}



முச்சக்கர
வண்டிகளைக் கொள்ளையிட்டு விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த மூவரை கொஸ்கம பொலிஸார் புதன்கிழமை (01) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட மூன்று முச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

கொஸ்கம - கனம்பெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி கொள்ளைச் சம்பவம் தொடர்பில், அப்பகுதியிலுள்ள CCTV காணொளிகளை ஆதாரமாகக் கொண்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, முதற்கட்டமாக கணேமுல்ல பகுதியில் வைத்து ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஒரு முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து, ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது அவர்களால் ஏற்கனவே திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு முச்சக்கர வண்டிகளையும் பொலிஸார் மீட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இக்குழுவினர் நீண்டகாலமாகத் திட்டமிட்டு இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் அறியகிடைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .