2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது

Yuganthini   / 2017 ஜூலை 25 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபர் ஒருவரைக் கடத்தி கப்பம் கோரியமை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மிரிஹாய பொலிஸ் சட்டத்தை அமுல்செய்யும் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளாவர்  

கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி பொரளை பகுதியிலுள்ள வீடொன்றினுள் கூட்டம் ஒன்று நுழைந்து, இருபதாயிரம் ரூபாயை கொள்ளையிட்டதுடன், நபர் ஒருவரை​க் கடத்திச் சென்ற  சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் பொரளை பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சந்தேகநபர்கள், நபர்களைக் கடத்தி அவர்களை விடுவிப்பதற்கு ஒரு இலட்சம் ரூபாய் பணத்தைக் கப்பமாகக் கோரியிருந்தமை பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் 30 வயதான உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் 31 வயதான பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளனர்

சந்தேகநபர்களை அளுத்கட நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த பொலிஸாரால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .