2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பொலிஸ் நிலைய கூண்டுக்குள் சந்தேகநபர் உயிரிழப்பு;விசாரணைகள் தீவிரம்

Super User   / 2010 மே 24 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தீடீரென உயிரிழந்த சம்பவமொன்று தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நபர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது பதிவை உறுதிப்படுத்தத் தவறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட மேற்படி நபர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக பொலிஸாரால் சந்தேகிக்கப்பட்டுள்ளார்.

நாலக பீரிஸ் (வயது 34) என அடையாளம் காணப்பட்டுள்ள இவரது சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவிலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .