Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2020 மார்ச் 11 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பழைய நாடாளுமன்றமான, தற்போதைய ஜனாதிபதி செயலகத்தை எதிர்வரும் 15 திகதியில் இருந்து வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) என்று குறிப்பிட்டு 011-2441685 என்ற தொலைநகல் இலக்கத்தை தொடர்புக்கொண்டு அல்லது 011-2354354 என்ற இலக்கத்தை அழைத்து இதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும்.
பழைய நாடாளுமன்றமானது ஐந்து பழமையான கட்டடக்கலை பாணிகளில் ஒன்றான ´அயோனியன் முறைமைக்கமைய 82 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் வெளிப்புற தோற்றம், ஏதென்ஸின் அக்ரோபோலிஸில் என்ற கிரேக்க தெய்வமான ´அதீனா´ வுக்காக கட்டப்பட்ட பிரதான மண்டபத்தை ஒத்ததாக காணப்படுகின்றது.
இதனை 1930 ஆண்டு ஜனவரி 29, திகதி ஆளுநர் சேர் ஹெர்பர்ட் ஸ்டான்லியால் என்பவர் சட்டமன்றமாக நிறுவினார்.
அரசியலமைப்பின் சீர்திருத்தங்கள் மற்றும் சட்டமன்றத்தில் அடுத்தடுத்த திருத்தங்களுடன், இது மாநில பேரவையாகவும் (1931-1947), பிரதிநிதிகள் சபையாகவும் (1947-1972), தேசிய மாநில பேரவையாகவும் (1972-1978) மற்றும் இலங்கை நாடாளுமன்றமாகவும் (1978-1982) கருதப்பட்டது.
பின்னர், புதிய நாடாளுமன்றம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், 1983 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் ஜனாதிபதி செயலகமாக பெயரிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago