2021 ஜனவரி 16, சனிக்கிழமை

பஸ் கட்டண அதிகரிப்பு விவகாரம்: அமைச்சரவை இன்று முடிவு

Kogilavani   / 2016 ஜூலை 12 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்துன் ஏ ஜயசேகர

போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவினால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக்குழுவின் புதிய நிபந்தனைகளை அடிப்படையாக் கொண்டு, பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில், இன்று செவ்வாய்க்கிழமை (12), அமைச்சரவையினால் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்குப் பின்னர், நிஹால் சோமவீரவின் தலைமையில், மேற்படி உயர்மட்டக்குழு நியமிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம், பஸ் கட்டணத்தை 3.21 சதவீதத்தால் அதிகரிப்பதற்கே, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, பயணிகள் மற்றும் பஸ் உரிமையாளர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதற்காக, இந்த உயர்மட்டக்குழு நியமிக்கப்பட்டது. இந்த உயர்மட்டக்குழுவின் மூலம் கிடைக்கப்பெறும் அறிக்கையின் பிரகாரம், புதிய நிபந்தனைகளுடனான பஸ் கட்டணம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்' என்று அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .