2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

பஸ் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை

Editorial   / 2020 ஜனவரி 20 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹுங்கம, படஅத்த பகுதியில் பஸ் மற்றும் டிப்பர் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 20 பேர் காலி  வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று (19) இரவு 08.50 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

பஸ் சாரதி, பெண், ஆண் பயணி மற்றும் சிறிய குழந்தை ஆகிய நால்வரும் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, உயிரிழந்துள்ளனர்.

டிப்பர் சாரதி, பஸ்ஸில் பயணித்த ஆண்கள் 07 பேர், பெண்கள் 07 பேர், 05 சிறுவர் ஆகியோரே காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தங்கால்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--