2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

‘முக்காலம் உணர்ந்தவர் ஜே.ஆர்’

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

 

“முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன, முக்காலம் உணர்ந்தவர். அவரிடமிருந்து நிறைய விடயங்களை தற்போதைய அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது” எனத் தெரிவித்த ஐக்கிய ​தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம், ஆட்சியை ஐ.தே.க தனித்து கைப்பற்றுமென, நம்பிக்கை வெளியிட்டார்.  

ஐ.தே.க வின் தொழிற்சங்க தலைமைக் காரியாலய வளாகத்திலிருக்கும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் சிலைக்கு முன்பாவிருந்தே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் 112ஆவது ஜனன தின நிகழ்வுகள், நேற்று (17) நடைபெற்றன. அதில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

“ஜே.ஆரின் ஆட்சியதிகாரக் காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டது போன்ற சலுகைகளைப் பெற்றுக்கொடுப்போம்” என்றார்.  

“1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பலமிக்கதோர் ஆட்சி அதிகாரம் கிடைக்கவில்லை. எனினும், நாம், தனித்து ஆட்சியைக் கைப்பற்றி, எமது கட்சி உறுப்பினர்களுக்கான சலுகைகளைப் பெற்றுக்கொடுப்போம்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--