2025 ஜூலை 12, சனிக்கிழமை

’முத்தடை வேண்டும்’

Editorial   / 2017 ஜூன் 05 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்சரிவு அபாயம் தொடர்ச்சியாக இருக்கின்ற பிரதேசங்களில் மரங்களை வெட்டுதல், மலைப்பாங்கான பிரதேசங்களை சுத்தம் செய்து தேயிலை கன்றுகளை நாட்டுதல் மற்றும் பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி மாணிக்கக்கற்களை அகழுதல் ஆகிய மூன்று விடயங்களுக்கும் முழுமையாக தடை விதிக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்திருந்த மக்கள், தங்களுடைய வீடுகளுக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு தேவையான சகலவற்றையும் மிக விரைவாக பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  

இரத்தினபுரி பிரதேச செயலாளர் காரியாலயத்தில் நடைபெற்ற, இரத்தினபுரி தொகுதி அனர்த்த முன்னேற்ற மீளாய்வுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

‘வெள்ள அனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருந்த இரத்தினபுரி மக்கள், மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். இரத்தினபுரி நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள மலைப்பாங்கான பிரதேசங்கள் பலவற்றில், மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.   

அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின், மேலே குறிப்பிடப்பட்ட மூன்று விடயங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட வேண்டும். இல்லையேல், இரத்தினபுரி நகரம் மீண்டும் வெள்ளத்துக்குள் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .