2021 மார்ச் 08, திங்கட்கிழமை

மின்சார ஊழியர் மீது தாக்குதல்;​ சபை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Yuganthini   / 2017 ஜூலை 20 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லேரியா, அம்பதல பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்று மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத காரணத்தால் மின் இணைப்பைத் துண்டிக்கச் சென்ற ஊழியர்கள் இருவரைத் தாக்கியமைக்கு எதிராக மின்சார சபையின் பொறியியலாளர்கள் இன்று (2) தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வேலை நிறுத்தப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தாக்குதல் நடத்திய நபரை இன்று கைது செய்யாவிட்டால் நாடுதழுவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த வேலைநிறுத்தத்துக்கு ஹோமாகம, ஹொரணை , பண்டாரகம மற்றும் அவிசாவளை பிரதேச மின்சார பொறியியலாளர்களும் தங்களது ஆதரவை வழங்கி உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .