2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மீனவர்களை தாக்கிய 10 பேர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

கற்பிட்டி-கீரமுந்தல் தீவுப்பகுதியில், மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மீது, தாக்குதல் நடத்திய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை துணைப் பிரிவின் அதிகாரியொருவர் உள்ளிட்ட  கடற்படை சிப்பாய்கள் 10 பேரே, கற்பிட்டி பொலிஸாரால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி, விஜய கடற்படை முகாமுக்கு இணையாக பணியாற்றிவந்த, கடற்படை துணைப் பிரிவின் அதிகாரியொருவர் உள்ளிட்ட 10 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், கற்பிட்டி-கீரமுந்தல் தீவுப்பகுதியில், கடந்த 14 ஆம் திகதி, ஐந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்குள்ளான குறித்த மீனவர்கள் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வெளியேறியுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--