2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

மலேஷிய முன்னாள் பிரதமர் மஹாதிர் இன்று இலங்கை வருகின்றார்.

Super User   / 2010 ஜூன் 08 , மு.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மஹாதிர் முஹம்மத் இன்று இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்கின்றார்.

மாலை 5.45 மணியளவில் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை வந்தடைவார் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

பிரதி வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்தனா கலாநிதி மஹாதிர் முஹம்மதை வரவேற்கவுள்ளார்.

1920ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி மலேஷியாவி கெடா மாநிலத்தலைநகரான அலோர் செதாரில் மஹாதிர் பிறந்தார்.

மலேஷியாவின் நான்காவது பிரதமராக 1981ஆம் ஆன்டு ஜுலை 16 ஆம் திகதி பதவியேற்ற மஹாதிர் முஹம்மத் 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் திகதி பதவி விலகினார்.

மலேஷியாவை சகல துறைகளிலும் முன்னணிக்கு கொண்டுவந்த பெருமை கலாநிதி மஹாதிரை சாரும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--