2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

யாழ்.பல்கலையில் புதிய பாடத்திட்டங்கள் ஆரம்பம்; 9ஆம் திகதி அங்குரார்ப்பணம்

Super User   / 2010 மே 07 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகந்தினி ரட்னம்

யாழ் பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர்கூடத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் யாழ் பல்கலைக்கழகத்தின் பொது இணைப்பாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான திருமதி.எஸ்.ரவீந்திரன் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

ஆங்கில மொழி அபிவிருத்தித் திறமை, சமூக முகாமைத்துவ அபிவிருத்தித் திட்டம், திட்ட வடிவமைப்பு முகாமைத்துவம் ஆகிய பாடத்திட்டங்களே ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கான வகுப்புக்கள் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் எஸ்.ரவீந்திரன் மேலும் குறிப்பிட்டார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--