2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

ரயில் மோதி ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2010 ஜூலை 07 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலித ஆரியவன்ஸ)

கொழும்புக்கும் பதுளைக்கும் இடையிலான எல்லாதொட்ட பகுதியிலுள்ள ரயில்த் தண்டவாளத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை பொலிஸாரினால் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் ரயிலில் மோதுண்டு பலியாகியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர். இதனையடுத்து பொலிஸாரினால்   சடலம் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த சடலம் பதுளை பொது வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர் இதுவரையில்  அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--