2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

‘ரயில் வீதிகள் நவீனமயப்படுத்தப்படும்’

Editorial   / 2020 ஜனவரி 10 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ரயில் வீதி கட்டமைப்பை உடன​டியாக நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ரயில் சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் என்ஜின்களால் ரயில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து கருத்து தெரிவித்த போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், ரயில் வீதிகளை புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதுடன் வௌ்ளையர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட ரயில் பாதைகளே இன்றும் பாவனையில் உள்ளதால் அவற்றை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--