2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

வடக்கில் இராணுவ முகாம்; தீர்மானத்தை கைவிடுமாறு ஆனந்த சங்கரி கோரிக்கை

Menaka Mookandi   / 2010 ஜூலை 06 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவில் இராணுவ முகாம் அமைத்தல் மற்றும் இராணுவத்தினருக்கு வட - கிழக்கில் நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதான அசசின் தீர்மானங்கள் இன்றைய சூழ்நிலைக்கு ஒவ்வாதவையே. இவற்றைச் செயற்படுத்துவதன் மூலம், எதிர்பார்த்த விளைவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்றும் விரைவில் ஓர் அனர்த்தத்திற்கு இவை வழிகோலும் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆனந்த சங்கரியினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

விடுதலை புலிகளிடம் ஆயுதங்கள் இருந்தமையினாலேயே அவர்கள் மக்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். இந்நிலையில், நட்புறவுடன் பழகக்கூடிய இராணுவம் இலங்கையில் காணப்படுகின்றமை மகிழ்ச்சிக்குரியதே. ஆனால் அவர்கள் மத்தியிலும் சில கறுப்பாடுகள் கலந்திருக்கக்கூடும்.

எவ்வாறெனினும், இலங்கையராகிய நாம் பூரணமான அமைதியான வாழ்க்கையினையே வேண்டி நிற்கின்றோம். எவர் கையிலும் ஆயுதம் இருப்பதை நாம் விரும்பவில்லை. தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் மற்றும் வேறு இனத்தவர், புலிகள், போர்வீரர்கள், பொதுமக்கள் என சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை நாம் இழந்துள்ளோம். இவர்கள் அனைவரும் நம் நாட்டு பிரஜைகளே.

எம் மக்கள் அனைவருக்கும் இராணுவ தலையீடற்ற சிவில் நிர்வாகமே தேவையானதாகும். இந்நிலையில் அரசு எமது வேண்டுகோளை செவிமடுத்து மக்களை அமைதியாக வாழ விட வேண்டும்.

மக்கள் எதுவித மேலாதிக்கமும் இன்றி சுகந்திரமாக நடமாட தொடங்கும் போது ஏனைய விடயங்களை பற்றி ஆலோசிக்கலாம். அப்படிச் செய்யத்தவறும் பட்சத்தில், இத்தனைக் காலமும் எடுத்த முயற்சிகளும் பல்வேறு பிரிவு மக்கள் செய்த தியாகங்கள் அத்தனையும் விழலுக்கிறைத்த நீராகிவிடும்.

  Comments - 0

  • xlntgson Tuesday, 06 July 2010 09:01 PM

    வன்னியை மிகைக்க வேண்டும் என்ற கூற்றை கவனிக்கும் போது மக்கள் ஆணையை பெற்றவர்கள் என்பதற்காகவே த.தே.கூ.வின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்காது என்று தெரிகிறது.

    இவர், மக்களின் ஆணையை பெறாதவர் என்பதால் புறக்கணிப்பது மிகவும் எளிது. தரைப்படைகள் வெளியேறாவிட்டால் மக்களின் பூர்வீக குடியிருப்புகளுக்கு செல்வதென்பது கனவே.

    வான் படையும் கடற்படையும் 'புலி' நிழலை தொடரக் காரணம் வடக்கும் கிழக்கும் தமிழர் செறிந்து வாழும் இடங்கள் என்ற நிதர்சனமே ஆகும். தெற்கில் தமிழர் பயமற்று வாழ்வதாக கூறப்படுவதும் பொய்யே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--