2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

வடக்குக்கான நான்கு ரயில் சேவைகள் இரத்து

Thipaan   / 2016 மே 17 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான அனைத்து ரயில் சேவைகளும் இன்று செவ்வாய்க்கிழமை (17) நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன், தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

காலை 6.10 மணிக்கு புறப்படும் கடுகதி ரயில், காலை 9.35 மணிக்குப் புறப்படும் யாழ்.தேவி ரயில், பிற்பகல் 1.45 மணிக்குப் புறப்படும் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் மற்றும் இரவு 7 மணிக்குப் புறப்படும் தபால் ரயில் ஆகியவையே நிறுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் பாதையில், தம்புத்தேகமே, தலாவ ஆகிய இடங்களில் ரயில் தண்டவாளங்களுக்குமேல் சுமார் 1 அடிக்கும் மேலாக வெள்ளநீர் பாய்வதால் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மறுஅறிவித்தல் வரும் வரையில் ரயில் சேவைகள் நடைபெறாது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, குறித்த ரயில்களில் பயணம் செய்வதற்கு முற்பதிவு செய்தவர்களின் பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .