2021 ஜனவரி 23, சனிக்கிழமை

வடக்கிலுள்ள நால்வரின் கனடா பயணம் தடுப்பு

Menaka Mookandi   / 2016 ஜூலை 08 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி விசா அனுமதிப்பத்திரத்தைக் கொண்டு, கனடாவுக்கு பயணிக்க முயற்சித்த இலங்கையர்கள் நால்வரை, குற்றப்புலனாய்புப் பிரிவினர், இன்று வெள்ளிக்கிழமை (08), கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

இவர்கள், யாழ்ப்பாணத்தின் முள்ளிபுரம் மற்றும் இளவாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 முதல் 33 வயதுக்கிடைப்பட்ட இளைஞர் யுவதிகளே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் சகோதர சகோதரிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள், துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான டி.கே 731 இலக்க விமானத்தில் பயணிக்க முயற்சித்தார்கள் என்றும் துருக்கியினூடாகவே கெனடாவுக்குச் செல்ல எத்தனித்துள்ளார்கள் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .