2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

விடுதலை புலிகள் மீண்டும் ஒரு அமைப்பை உருவாக்குவதற்கு முயற்சி

Super User   / 2010 ஜூன் 08 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடபகுதியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் மீண்டும் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கு விடுதலைப் புலிகள் முயற்சிக்கின்றனர் என்று அரசு எச்சரித்திருப்பதாக சீன நாட்டு ஊடகமொன்று தெரிவித்தது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குயேற்றப்படும் மக்களுடன் மக்களாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர்கள் செல்வதற்கு திட்டமிட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன குறிப்பிட்டார்.

இந்நிலையில், விடுதலைப் புலிகளின் தனி நாடொன்றைக் கோரும் கனவு இதுவரை விட்டுக்கொடுக்கப்படவில்லை எனவும்  அவர் கூறினார்.

மீண்டும் இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும்,  இதனாலேயே,  மே மாதமளவில் 77 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் டி.எம்.ஜயரட்ன மேலும் குறிப்பிட்டார்.  Comments - 0

  • koneswaransaro Wednesday, 09 June 2010 12:04 AM

    தமிழர்களின் கோரிக்கைகளைத் தாமதப்படுத்துவதற்கும் அவசரகால நிலைமையை நீட்டித்து சிங்கள மக்களை மாயையில் வைத்திருப்பதற்குமான உத்திதான் இது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--