2021 ஜனவரி 20, புதன்கிழமை

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

Editorial   / 2019 நவம்பர் 13 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பின்போது, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தினால் முன்வைக்கப்பட்ட அதிகளவான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில்  பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் 54 பேர்  தபால் மூல வாக்களிப்பதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில்,  43 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தனர்.

அதில், 25 விண்ணப்பங்கள் பொலிஸ் நிலைய நிர்வாகக் கட்டமைப்பின் கவனயீனம் காரணமாக நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த  விண்ணப்பதாரிகளுக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .