2021 மே 10, திங்கட்கிழமை

வைத்தியசாலையிலிருந்த கைதி தப்பியோட்டம்

Editorial   / 2017 ஜூன் 12 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சைப் பெறுவதற்காக, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நீர்கொழும்பு சிறைச்சாலைக் கைதியொருவர், அங்கிருந்து இன்றுத் திங்கட்கிழமை (12) காலை தப்பிச் சென்றுள்ளார்.

சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த வல்பொல, உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த கைதியொருவரே, இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இவருக்கு எதிராக, கொள்ளை உள்ளிட்ட எட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து, கடந்த மாதம் 30ஆம் திகதியன்று, நான்கு கைதிகள் தப்பியோடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X