2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

வனப்பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரகஹகந்த வனப்பகுதியில் இருந்து மனித எச்சங்கள் என்று சந்தேகிப்படும் எலும்புகளில் பாகங்கள் சில இன்று (02) மீட்கப்பட்டுள்ளன.

பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய நாவுல பொலிஸாரால் குறித்த பகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, எலும்புகள் மற்றும் காற்சட்டை, ரீ-சேட் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த இடத்திலிருந்து 100 மீற்றர் தூரத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன கண்டுடிக்கப்பட்டுள்ளன.

அதில், இலக்கம் 1/60, வெலன்கொல்ல, கொன்கஹவெல, நாவுல, மாத்தளை என்ற முகவரி காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர், குறித்த பகுதியில் சாரதியாக பணியாற்றிய நிலையில், கடந்த சில காலமாக அவரை காணவில்லை என பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X