2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

வரட்சியின் காரணமாக கிராமங்களுக்குள் புகும் காட்டு யானைகள்

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம் – தந்திரிமலை – ருவன்புர பிரேதசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இன்று (17) அதிகாலை நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் 42 வயதுடையவரெனத் தெரிவித்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், நிலவும் வரட்சியின் காரணமாக வில்பத்து வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் வெளியேறி கிராமங்களுக்குள் புகுவதாகவும், இதனாலேயே இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் கடந்த மாதம் மட்டும் அனுராதபுர மாவட்டத்தில் காட்டு யானையின் தாக்குதலினால் நால்வர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .