2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

வெலிகந்தை புனர்வாழ்வு நிலையம் செல்ல உறவினர்களுக்கு இலவச பஸ் சேவை

Super User   / 2010 ஜூன் 08 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்திலுள்ள இளைஞர்களை அவர்களின் உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கான பயணச் செலவை  வவுனியா மாவட்ட மனித உரிமைகள் இல்லம் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், பிரதி சனிக்கிழமை தோறும் வவுனியா வைரவர்புளியங்குளம் அலுவலகத்திலிருந்து காலை 6 மணிக்கு வெலிகந்தை நோக்கி பஸ்ஸொன்று பயணிக்கவுள்ளதாக மனித உரிமைகள் இல்ல இணைப்பாளர் பெரின் சேவியர் தெரிவித்தார்.

இதனால், குறித்த இளைஞர்களைப் பார்வையிடுவதற்காகச் செல்லும் அவர்களது உறவினர்கள் முன்கூட்டியே தமக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--