2025 டிசெம்பர் 05, வெள்ளிக்கிழமை

வெள்ளவத்தை - பத்தரமுல்லை படகு சேவை ஆரம்பம்

Editorial   / 2020 மார்ச் 04 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரத்தில் வாகன நெரிசலுக்குத் தீர்வாக வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை வரையில் படகு சேவை இன்று (03) ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான நடவடிக்கையை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

புதிய போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் இந்த திட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம். ஆர்.டப்ளியு.சொய்சா, இதனைக் கூறியுள்ளார்.

இந்த படகு சேவைக்காக நியாயமான கட்டணமே பொதுமக்களிடமிருந்து அறவிடப்படும் என்றும், முழுமையான பலன் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்பதே எமது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X