George / 2017 ஜூன் 04 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
வவுனியா மாவட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர், திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பகுதியைச் சேர்ந்த எஸ். மகேந்திரன் வயது 32 என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கொன்றில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, கடந்த புதன்கிழமை (31) முதல், வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .