2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

'68 வாக்குகளால் தோற்றது'

Kanagaraj   / 2016 மார்ச் 24 , பி.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தகவலறியும் உரிமைச் சட்டமூலம், நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் சபை கூடியபோதே, இது சமர்ப்பிக்கப்பட்டது.

சபாநாயகராக இன்று இருக்கின்ற கரு ஜயசூரிய, 2011ஆம் ஆண்டு ஐக்கிய  தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது அக்கட்சி, எதிர்க்கட்சியாக இருந்தது. அன்றைய காலப்பகுதியில் கரு ஜயசூரிய இந்த தகவலுக்கான உரிமை சட்டமூலத்தை தனியாள் சட்டமூலமாக அவைக்கு கொண்டுவந்தார்.

அது வாக்கெடுப்புக்கு விடுக்கப்பட்ட போது, 68 வாக்குகளால் அந்தச சட்டமூலம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .